ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (07:53 IST)

அடுத்த ஆண்டும் சென்னை அணியில் தொடர்வேன்: தல தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த தல தோனி அவர்கள் சென்னை அணிக்காக அடுத்த ஆண்டும் விளையாடுவேன் என்று கூறியிருப்பது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை அடுத்து தல தோனிக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் வெற்றிபெற்ற பின்னர் பேசிய தல தோனியின் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில் பிசிசிஐ முடிவை பொறுத்து தனது ஐபிஎல் எதிர்காலம் அமையும் என தெரிவித்தார் 
 
மேலும் சென்னை அணிக்காக விளையாடுவது என்பதைவிட சிறந்தது எது என பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். சென்னை அணியில் நீங்கள் விட்டுச்சென்ற மரபு குறித்து பெருமைப் படுகிறீர்கள? என்று கேள்வி கேட்டதற்கு நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை என்றும் அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலும் சென்னை அணியில் தொடர்வேன் என்றும் தோனி தெரிவித்தார்