சாம்பியம் பட்டம் வென்ற சென்னை அணிக்கு எத்தனை கோடி பரிசு?
சாம்பியம் பட்டம் வென்ற சென்னை அணிக்கு எத்தனை கோடி பரிசு?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான சென்னை அணிக்கு ரூபாய் 20 கோடி நேற்று பரிசளிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த நிலையில் வெற்றி பெற்று சாம்பியன் அணியான சென்னை அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அளித்தார்
நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று 20 கோடி பரிசுத் தொகையை அளிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 12.5 கோடி பரிசு வழங்கப்பட்டது என்பதும் இந்த இரண்டு பரிசுகளையும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது