உலகிலேயே மிகவும் அழகான ஆண்: ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்!

Last Updated: சனி, 17 ஆகஸ்ட் 2019 (18:00 IST)
உலகத்திலேயே மிகவும் அழகான ஆண் நடிகர் யார் என்ற வாக்கெடுப்பில் உலகப்புகழ் பெற்ற பல பிரபலங்களை வீழ்த்தி இந்திய நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தை பிடித்துள்ளார். 


 
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உலகின் மிக அழகான மனிதரை (Top 5 Most Handsome Men In The World ) தேர்ந்தெடுக்கும் போட்டியை நடத்தினர் இதில் பல முன்னணி ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி இந்திய நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்துள்ளார். 


 
அவரது அழகின் ரகசியம் குறித்து கேட்டபோது, ஹ்ரித்திக் ரோஷன் கூறியதாவது, உலகின் அழகிய ஆண் என்று என்னை தேர்ந்தெடுத்ததற்காக மிக்க நன்றி. இருந்தாலும்,  உண்மையில் முகத்தின் அழகு ஒரு சாதனை அல்ல, என்னை பொறுத்தவரை நல்ல மனிதரும் அவருடைய நல்ல குணம் தான் அழகு . நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவராக தோன்றினால் அதுவே  உங்களை மிகவும் அழகாக காண்பிக்கும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :