புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (08:54 IST)

தனுஷுக்கு வில்லனா ஹ்ருத்திக் ரோஷன் – மீண்டும் பாலிவுட் !

தனுஷ் புதிதாக நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான படத்தை இயக்கியவர் ஆனந்த் எல் ராய். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தனுஷை பாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. அதையடுத்து தனுஷ் அமிதாப் பச்சனோடு நடித்த ஷமிதாப் படம் எதிர்பார்த்த அளவு போகததால் பாலிவுட்டில் இருந்து சற்றுகாலம் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும், தனுஷுக்கு ஜோடியாக சாயிப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலை ஆனந்த் எல் ராய் தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யவில்லை.