1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (13:38 IST)

மனைவி இருக்கும்போதே என்னுடன் டேட்டிங்!’ - ஹிர்திக் ரோஷன் மீது கங்கனா புது குண்டு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது.
 
கங்கனாவால் ஹிர்திக் மனைவி விவாகரத்து வாங்கி பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஹிர்திக்கை காதலித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்ட கங்கனா, என்னுடனான காதலை ரகசியமாக நீட்டிக்க விரும்பியதால்  அவரை விட்டு விலகிவிட்டேன் என்றார்.
 
இதனால் பாலிவுட்டில் வீசிய புயல் அனைவருமே அறிந்ததே. அண்மையில், கங்கனா
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிலர் தங்கள் மனைவிகளை வைத்துக்கொண்டு இளம்பெண்களுடன் சுற்றிவருகின்றனர். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். உதாரணத்துக்கு ஹிர்திக் ரோஷனைக் கூறுகிறேன். ஹிர்திக் அவரின் மனைவி பின்னால் இருக்கும்போதே என்னுடன் டேட்டிங் செய்துள்ளார். மனைவி இருக்கும்போது இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவருடன் இணைந்து யாரும் வேலை செய்யக் கூடாது' என்று தெரிவித்தார். 

ஏற்கனவே #மீ டூ விவகாரத்தால் பாலிவுட்டில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் கங்கனாவின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.