திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:14 IST)

மீ டூ புகாரில் சிக்கிய பேட்ட நடிகர் - பிரபல நடிகை பகீர் புகார்

ரஜினிக்கு வில்லனாக பிரபல இந்திப் பட நடிகர் நவாசுதீன் சித்திக் பேட்ட படத்தில் நடித்துள்ளார். 
"பாபுமோஷாய் பந்தூக்பாஸ்" படத்தில் நடித்தபோது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை கண்டும் காணாததுபோல் இருந்தார் என நடிகர் நவாசுத்தீன் சித்திக் மீது நடிகை சித்ரங்கடா சிங் புகார் தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் குஷால் நந்தி பாபுமோஷாய் பந்தூக்பாஸ் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகை  சித்ரங்கடா சிங் கடந்த 2016ம் ஆண்டு வெளியேறினார். மேலும், கதைக்கு தேவையில்லாத படுக்கையறை காட்சிகளில் தன்னை நடிக்குமாறு இயக்குனர் கூறியதாக தெரிவித்தார். 
 
சேலையை அவிழ்த்துவிட்டு ஜாக்கெட்டின் ஊக்கை கழற்றிவிட்டு ஹீரோவான நவாசுத்தீன் சித்திக்கியின் மேல் ஏறி அமர்ந்து என்னை நானே தடவிக்கொள்ளவேண்டும் என்று இயக்குனர் கூறினார். முடியாது என்று எவ்வளவோ சொல்லியும் இயக்குனர் குஷால் என்னை கட்டாயப்படுத்தினார். 
 
நான் எவ்வளவோ கெஞ்சியும் அதை பொருட்படுத்தாத இயக்குனர், என்னை பார்த்து ரொம்ப சீன் போடாமல் சொன்னதை  செய் என்றார். மேலும் அந்த படுக்கையறை காட்சியில் நடிக்குமாறு என்னை மிரட்டினார்கள். ஆனால் அந்த இக்கட்டான சூழலில் கூட நவாஸ் அதை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தார். 
 
எனவே தவறு செய்த ஆண்கள் தான் பயப்பட வேண்டும். மீ டூ இயக்கம் மேலும் மேலும் தீவிரம் அடையும் என்று நம்புகிறேன் என்று சித்ரங்கடா சிங் தெரிவித்துள்ளார்.