வியாழன், 11 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (15:11 IST)

இங்க இப்படியா நடந்துகிட்டு இருக்கு... நள்ளிரவில் நாடு திரும்பிய அக்ஷய் குமார் ஷாக்!

இங்க இப்படியா நடந்துகிட்டு இருக்கு... நள்ளிரவில் நாடு திரும்பிய அக்ஷய் குமார் ஷாக்!
பாலிவுட்டில் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். இவர் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிநாடு சென்று இருந்த அக்சயக்குமார் நேற்று இரவு  நாடு திரும்பினார்.

திரையுலகில் நடந்த பாலியல் சீண்டல் விவகாரம் #meetoo இயக்கத்தால் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது தொடர்பாகவே அனைத்து ஊடகங்களிலும், செய்திதாள்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வந்து கொண்டிருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர் அக்ஷய்  குமார்,  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நேற்று இரவு தான் நான் நாடு திரும்பினேன். இங்கு வெளியாகும் செய்திகள் அனைத்தையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தயாரிப்பாளர்கள் படங்களின் ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு, உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்ன  நடந்திருந்தாலும் அதற்கு தேவை உறுதியான நடவடிக்கையே... நான் தவறு செய்தவர்களுடன் பணியாற்ற விரும்பவில்லை. பெரிய தலைகளால், யாரெல்லாம் துன்புறுத்தப்பட்டிருந்தார்களோ, அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.