செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:11 IST)

"தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" மிரட்டலான புதிய போஸ்டர்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் - அமீர் கான் ஆகியோர் நடித்து வரும் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். 1839ஆம் ஆண்டு வெளியான ‘கன்பெஷன் ஆப் ஏ தக்’ என்ற நாவலை தழுவி பிரமாண்டமாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் முதல்முறையாக அமிதாபச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்து வருகிறார்கள்.
 
ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் மேக்கிங் விடியோ வெளியான நிலையில் தற்போது இதன் இரண்டாவது போஸ்டரை அமீர்கான் தனது இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார்.
 
இத்திரைப்படம் நவம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது