ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (15:18 IST)

இந்தியன் மி டூவால் ஷூட்டிங்கை நிறுத்திய அக்‌ஷய் குமார்

மி டூ சர்ச்சை நாடு முழுவதிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் வேளையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தனது படத்தின் படப்பிடிப்பினை அக்‌ஷய் குமார் நிறுத்தியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகை தனுஸ்ரீதத்தா நானா படேகர் மீது பாலியல் புகார் அளித்ததை அடுத்து வரிசையாக பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை வெளியுலகத்துக்கு அறிவித்து வருகின்றனர். அதில் இந்தி சினிமா உலகின் பல முக்கிய பிரமுகர்கள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடன இயக்குனர் பரா கானின் தம்பியுமாகிய சஜீத் கான் மீது நடிகை ரசேல் வொயிட் பாலியல் புகார் கூறியிருந்தார். சஜித் கான் தற்போது அக்‌ஷய் குமார் நடிக்கும் ஹவுஸ்ஃபுல் 4 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த விஷய்த்தை அறிந்த நடிகர் அக்‌ஷய் குமார் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பினை நிறுத்தியிருக்கிறார். இது சம்மந்தமாக அவர் தனது டிவிட்டரில் ‘வெளிநாட்டிலிருந்து தற்போதுதான் இந்தியாவுக்கு வந்தேன். வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் கவலை அளிப்பதாக உள்ளன. எனது தயாரிப்பாளர்களிடம் ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் படப்பிடிப்பினை நிறுத்தும் படிக் கேட்டுக்கொண்டுள்ளேன். நான் எந்தவொரு நிரூபிக்கப்பட்ட குற்றவாளியோடும் வேலை செய்ய விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் காது கொடுத்துக் கேட்கப்பட்டு அவர்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும்’ எனத் தனது ஆதரவைப் பகிர்ந்துள்ளார்.

இதனால் ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து தான் விலகிக் கொள்வதாக சஜித் கான் தெரிவித்துள்ளார்.