வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:34 IST)

புத்தாண்டு தினத்தன்று உலகிலேயே அதிக குழந்தைகள் பிறந்த நாடு எது?

உலகம் முழுவதும், 2020இன் புத்தாண்டு தினத்தன்று தோராயமாக 3,92,078 குழந்தைகள் பிறந்ததாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக, புத்தாண்டு தினத்தன்று, பசிபிக் பெருங்கடலில் அமைத்துள்ள பிஜியில் முதல் குழந்தையும், அமெரிக்காவில் கடைசி குழந்தையும் பிறந்ததாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
புத்தாண்டு தினத்தன்று உலகிலேயே அதிகமாக இந்தியாவில் 67,385 குழந்தைகள் பிறந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மக்கள் தொகையில் முதலிடத்தை வகிக்கும் சீனாவில் 46,299 குழந்தைகள் பிறந்தன.
 
சிசேரியனை குறைப்பதில் வெற்றி கண்ட சீனா - சாத்தியமானது எப்படி?
குழந்தைகளில் யாருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம் - சுகப்பிரசவம் (அ) சிசேரியன்? உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்துள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேலானவை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு நாடுகளில் பிறந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
இந்தியா 67,385
சீனா 46,299
நைஜீரியா 26,039
பாகிஸ்தான் 16,787
இந்தோனீஷியா 13,020
அமெரிக்கா 10,452
காங்கோ ஜனநாயக குடியரசு 10,247
எத்தியோப்பியா 8,493
 
புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளை உலகம் முழுவதும் குழந்தை பிறப்பதற்கான ஒரு நல்ல நாளாக ஒவ்வொரு ஜனவரி மாதமும் கொண்டாடுவதாக யுனிசெஃப் அமைப்பு கூறுகிறது.
 
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பச்சிளம் குழந்தைகளுக்கு, அவர்கள் பிறந்த நாள் மிகவும் மோசமான ஒன்றாக அமைவதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
 
2018ஆம் ஆண்டில் பிறந்த 2.5 மில்லியன் (25 லட்சம்) குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் முதல் மாதத்திலும், அந்த 25 லட்சம் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வாழ்க்கையின் முதல் நாளிலும் உயிரிழந்ததாக யுனிசெஃப்பின் அறிக்கை விவரிக்கிறது.
 
"குறை பிரசவம், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் போன்ற தடுக்கக்கூடிய காரணங்களால் அவர்கள் இறந்தனர். அதுமட்டுமின்றி, ஒவ்வோர் ஆண்டும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்து பிறக்கின்றன."
 
குழந்தை வளர்ப்புக்கு 13 முக்கியக் குறிப்புகள்
 
குழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்?
எனினும், கடந்த மூன்று தசாப்தங்களில், தங்களது ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாக யுனிசெஃப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.