புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (11:37 IST)

புத்தாண்டில் வளைத்து வளைத்து பைக்குகள் பறிமுதல்..

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிவேகமாக ஓட்டிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டங்கள் கலைகட்டும் வேளையில் பல இளைஞர்கள் கொண்ட்டாட்டம் என்ற பெயரில் அதிவேகமாக பைக் ஓட்டி செல்வது வழக்கமாக காணப்படும் ஒன்று. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி சென்னையின் பல பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அதிவேகமாக சென்ற 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.