1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 20 மே 2019 (11:59 IST)

வின்சென்ட் லேம்பெர்ட்: குடும்பத்தினரின் மாறுபட்ட கருத்துக்களால் கருணை கொலை தாமதம்

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரான்சில் துன்பங்களில் இருந்து விடுபட, கருணை கொலை செய்வதற்கு தகுந்தவர் என்ற வகையில் நாட்டில் விவாதப்பொருளாக இருந்த ஒரு நபருக்கு வழங்கப்படும் சிகிச்சை இந்த வாரம் நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
வின்சென்ட் லேம்பெர்ட் என்ற அந்த 42 வயதான நபர் கடந்த 2008 இல் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தினால் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் தொடர்வது குறித்து லேம்பர்ட் குடும்பத்தினர் இடையே மாறுபட்ட கருத்துகள்  எழுந்துள்ளன.
 
லேம்பர்டுக்கு பொருத்தப்பட்ட முக்கிய உணவு மற்றும் சுவாச குழாய்களை திரும்பப் பெற அவரது மனைவி விரும்புகிறார். அதேவேளையில்  அவரது பெற்றோர் லேம்பர்ட் தொடர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
லேம்பர்ட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள உயிர் காப்பு கருவிகள் நீக்கப்பட்டு அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம் என்று ஒரு பிரெஞ்சு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஐரோப்பாவின் உயர்மட்ட நீதிமன்றம் உறுதி செய்தது.