புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (16:26 IST)

கமல் கட்சி வேட்பாளரின் கவனக்குறைவால் ஒரு தொகுதி வேஸ்ட்:

கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 40 வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுவதாக உணர்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால் அனைவரும் மதியத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
 
ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் தொகுதியில் செந்தில் குமாரின் மனுவை ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இன்று 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் 3.20க்கு செந்தில்குமார் தாமதமாக வந்ததால் அவரது மனுவை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். 20 நிமிடங்கள் தாமதமாக கவனக்குறைவால் வேட்பாளர் வந்ததால் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் தொகுதிகளில் ஒன்று குறைந்துவிட்டதாக அக்கட்சியினர் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.