செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (15:50 IST)

பாலியல் தொழிலாளியின் சோகக் கதை - இரண்டு நிமிட உடலுறவு; 40 ரூபாய் பணம்

மேற்கு ஆஃபிரிக்க நாடான சியரா லியோனில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளியின் கதை இது.
 

 
சியரா லியோனில் சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள்.
 
இபோலா நெருக்கடியை அடுத்து அதிக பெண்களை தெருக்களில் காண முடிவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
 
18 வயதான ஃபட்மடா கனு, பாலியல் தொழிலாளியாக தான் இருக்கும் வாழ்க்கைக் குறித்து விவரிக்கிறார்.
 
"பாலியல் உறவு வைத்துக்கொள்ள தெருக்களில் ஆண்கள் கிடைக்கவில்லை என்றால் அன்று எனக்கு உணவு இருக்காது என்று அர்த்தம். பாலியல் உறவு தேவைப்படும் ஆண்கள், என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். ஒரு நாள் முழுக்க என்னுடன் உறவு வைத்துக்கொண்டு, எனக்கு வெறும் 5,000 லியோன் காசுகள் (ரூ.40) மட்டுமே கொடுப்பார்கள்" என்கிறார் ஃபட்மடா கனு.
 
'ஐந்து ஆண்டுகளில் 16 பேர் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர்' - ஓர் ஏழைப் பெண்ணின் கதை
 
பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: 'சர்வதேச பாலியல் தொழிலுக்கு ஒரு முக்கிய ஆதாரம்'

தனது 14 வயதில் பாலியல் தொழிலுக்கு வந்ததாக அவர் கூறுகிறார். "எங்கள் தாயால் எங்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதால் எங்களை துரத்தி விட்டார்."
 
அவருடன் இருந்த மற்றொரு பாலியல் தொழிலாளியான மரியமா ஃபோபானா முகத்தில் பல காயங்கள் இருந்தன. அலங்காரத்தால் அவற்றை மறைக்க முயற்சி செய்தார்.
 
"கடைசியாக நான் பாலியல் உறவு வைத்துக் கொண்ட ஆண் ஒருவர், என்னுடன் உறவு வைத்துக் கொண்டு, பணம் தராமல் ஓடிவிட்டான். நான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தோடு, என் கைப்பேசியையும் எடுத்துச் சென்றுவிட்டான். அவனுடன் சண்டையிட முயற்சித்தேன். அப்போது என்னை முகத்திலும், உடலிலும் தாக்கிவிட்டு ஓடிவிட்டான்" என்று அவர் கூறினார்.
 
 
"என் தாய் இபோலாவால் இறக்கவில்லை என்றால், நான் இன்று இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன்" என்று கண் கலங்கியவாறு ஃபட்மடா கனு தெரிவித்தார்.
 
"இது மஸ்காரா. என் இமைகளை சரி செய்து கொள்கிறேன். சில ஆண்கள், இது நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். என்னை தனியே அழைத்துச் செல்வார்கள்."
 
ஓர் இரவில், ஏழு முதல் எட்டு வாடிக்கையாளர்கள் வருவதாக கூறுகிறார் ஃபட்மடா கனு.
 
"சில நேரம், 5000 லியோன் காசுக்காக இரண்டு நிமிடம் மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்வேன். உடலுக்கான விலை 50,000 லியோன் காசுகள். (சுமார் ரூ.391). ஆணுறையின் விலை 25,000 காசுகள் (சுமார் ரூ.196) எனக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள். நான்தான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன். நான் வெளியே சென்று சம்பாதித்து வருவேன்.
 
நான்தான் அவர்களுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்துகிறேன். எனக்கு ஒரு நாள் செவிலியராக வேண்டும் என்று ஆசை. இது என் சிறுவயது கனவு" என்கிறார் அவர்.