வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (15:27 IST)

மனித சிறுநீரிலிருந்து உருவாக்கப்பட்ட பீங்கான் பாத்திரங்கள்: சீனாவை சேர்ந்த பெண் அசத்தல்.

சீனா நாட்டில் பீஜியிங் நகரத்தை சேர்ந்த சீனெ கிம் என்ற வடிவமைப்பாளர் மனித சிறுநீரிலிருந்து பீங்கான் பாத்திரங்களை தயாரித்து வருகிறார்.
ஆசியாவில் கைவினை பொருட்களை திறன்பட செய்யும் நாடு சீனா.பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிலிருந்தே ஆசிய கண்டத்தில் பீங்கான் பாத்திர பொருட்கள் மக்களின் முக்கிய பயன்பாடாக இருந்து வருகிறது.ஆரம்பத்தில் களிமண்,சோடா மாவு,சாம்பல் ஆகியவற்றை பயன்படுத்தியே பீங்கான் பாத்திரங்களை வடிவமைத்து வந்தனர்.பின்பு நவீனத்துவமும் விஞ்ஞானமும் வளர்ந்த பிறகு லெட் ஆக்சைடை பயன்படுத்தி உருவாக்க ஆரம்பித்தனர்.
 
ஆனால் சமூக ஆர்வலர்கள் லெட் ஆக்சைடு போன்ற அமிலங்களால் பயன்படுத்தப்படும் பீங்கான் பாத்திரங்கள் சுற்று சூழலை பாதிக்கின்றன என்று கடுமையான தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர்.இதனை கருத்தில் கொண்ட சினே கிம் சிறுநீரிலிருந்து தயாரிப்பதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டார்.எட்டு வருடங்களாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இதை உருவாக்கி இருப்பதாக சீனே கிம் கூறியுள்ளார்.
 
சீனே கிம்மிற்க்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.