வானத்தில் பறந்து செல்லும் ரயில்: வைரலாகி வரும் வீடியோ
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதி சுற்றுவட்டாரங்களில் இரவில் வானத்தில் ரயில் போன்ற ஒன்று செல்வதை மக்கள் பார்த்து பீதியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ், மிசிசிப்பி மாகாணங்களில் மக்கள் இரவு நேரங்களில் வானத்தை பார்க்கும் போது தொடர்ச்சியாக ஒளிகள் சில் கோடு போட்டது போல நேராக வானில் செல்வதை பார்த்திருக்கிறார்கள். இதை வெறும் கண்களாலேயே காண முடிந்திருக்கிறது. அந்த ஒளி வரிசையை பார்ப்பதற்கு தூரத்திலிருந்து ரயிலை பார்ப்பது போலவே இருப்பதால் அதை வானத்தில் பறக்கும் ரயில் என்றே நினைத்திருந்தார்கள்.
இந்நிலையில் அங்குள்ள ஸ்பேஸ் எக்ஸ் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய செயற்கைக்கோள்கள்தான் அவை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அந்த நிறுவனம் உலகமெங்கும் அதிவேக இணைய சேவையை அளிக்க இருக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு பெயர் ‘ஸ்டார்லிங்க்’. இந்த திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இருக்கிறார்கள். இதன் முதல் தவணையாக போன வாரம் 60 செயற்கைக்கோள்களை வானில் ஏவியிருக்கிறார்கள். அவைதான் ரயில் போல ஒரே நேர்க்கோட்டில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. 60 செயற்கைக்கோள்களுக்கே இப்படி என்றால் 12 ஆயிரம் செயற்கைக்கோள்களை வானில் விட்டால் அப்புறம் நட்சத்திரங்களியே பார்க்க முடியாது. அந்தளவுக்கு குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருக்கும் இந்த செயற்கைக்கோள்கள்.