புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (11:01 IST)

சிறுமியை சுட்டுக் கொன்ற போலீசார் மீது வழக்கு

எட்டு வயது சிறுமி ஒருவரை சுட்டுக் கொன்றதாக அமெரிக்காவில் மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் முதலில் கைதான இரு பதின் வயதினர் மீதுமான வழக்கு கைவிடப்பட்டுள்ளது.

ஃபிலடெல்ஃபியாவில் 2021 ஆகஸ்டு 27ஆம் தேதி, பள்ளி ஒன்றின் கால்பந்து போட்டி நடந்த மைதானத்துக்கு வெளியே இருந்த வாகனத்தில் அமர்ந்திருந்த ஃபாண்டா பிலிட்டி எனும் சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதற்கு அருகே இரு பதின்வயதினர் ஒருவரை நோக்கி ஒருவர் சுட்டதால், வாகனத்தின் உள்ளே ஆயுதம் தாங்கிய சந்தேக நபர்கள் இருந்ததாக எண்ணி காவல் அதிகாரிகள் சுட்டதாக அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.