புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (08:46 IST)

சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி; ஆந்திரா முதலிடம்! – மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்!

இந்தியாவில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஆந்திர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் 15வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 3 முதலாக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 1 முதல் இதற்கான முன்பதிவுகள் தொடங்கியது.

கடந்த 3 நாட்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியா முழுவதும் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஆந்திர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று வரை ஆந்திராவில் 85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அங்குள்ள 15-18 வயதினர் தொகையில் 39.8 சதவீதம் ஆகும். அடுத்ததாக இமாச்சல பிரதேசம், குஜராத், டையூ டாமன், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.