வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (12:36 IST)

அடுத்தடுத்து கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9 நர்சுகள்: வைரலாகும் புகைப்படங்கள்!

அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 9 செலிவியர்கள் அடுத்தடுத்து கருவுற்று குழைந்தை பெற்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க போர்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 9 செவிலியர்கள் திருமணமாகி அவர்களது கணவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கர்ப்பமாகி உள்ளனர். 
இவர்கள் 9 பேரும் அடுத்தடுத்து கர்ப்பமானது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து குழந்தைகளையும் பெற்றுள்ளனர். தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இவர்கள் பணிபுரிந்த மருத்துவனமனையே இவர்களது பிரசவ செலவை ஏற்றுள்ளது. அதோடு மருத்துவமனையில் செவிலியர்கள் வேலை காலியாக உள்ளது எனவும் விளம்பரப்படுத்தியுள்ளது.