செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (23:18 IST)

உலகிலேயே இளம் வயது யோகா பயிற்றுவிப்பாளர் இவர் தான் !

Yoga
ஒன்பது வயதில், சான்றளிக்கப்பட்ட உலகிலேயே இளம் வயது யோகா பயிற்றுவிப்பாளர் ஆகியிருக்கிறார் ரேயான்ஷ் சுரானி. இவரை யோகா பயிற்சியாளராக உலக கின்னஸ் சாதனை அமைப்பும் அங்கீகரித்திருக்கிறது.
 
யோகா மீதான காதல் இவருக்கு நான்கு வயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது.
 
"யோகா வேடிக்கையானது, சலிப்பை ஏற்படுத்தாது என்று நான் உறுதியளிக்கிறேன். இதில் சிறப்பானது என்னவென்றால், அனைத்து வகையான உடலமைப்பு உள்ளவர்களும் இதைச் செய்ய முடியும்.
 
உண்மையை சொல்லவேண்டுமானால், நான் நடக்கத் தொடங்குவதற்கு முன்பே யோகாவைத் தொடர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். பிராணாயாமமும், மூச்சுப் பயிற்சியும் செய்து கொண்டிருந்தேன்," என்கிறார் ரேயான்ஷ் சுரானி.