1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2019 (14:58 IST)

விசா இல்லாமலே சௌதி செல்லலாம்... எப்படி தெரியுமா?

முதல் முறையாக சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ளது சௌதி அரேபியா.
 
நாட்டின் பொருளாதாரத்துக்கு முற்றிலும் கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் போக்கை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதல் முறையாக சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ளது சௌதி அரேபியா.
 
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 49 நாடுகளை சேர்ந்தவர்கள் எவ்வித விசாவும் இன்றி நேரடியாக சௌதி அரேபியாவுக்கு வருவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நடவடிக்கையின் மூலம், சௌதி அரேபியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் வருகையை 2030 ஆம் ஆண்டிற்குள் பத்து கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
அதுமட்டுமின்றி, இதன் மூலம் சௌதியின் சுற்றுலாத்துறையை மையமாக கொண்டு புதிதாக பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், சௌதி அரேபியாவில் பெண்களுக்கு இருக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் சுற்றுலாவுக்கு வரும் பெண்களுக்கு முற்றிலும் பொருந்தாது என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
 
இதற்கு முன்புவரை, பெரும்பாலும் யாத்ரீகர்கள், தொழில் மற்றும் புலம்பெயருபவர்களுக்கு மட்டுமே சௌதி அரேபியா விசா வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.