புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (09:04 IST)

டெக்னிக்கல் ஹால்ட், டெக்னிக்கல் பால்ட் ஆனது – ஊடகங்கள் மேல் விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம் !

கடந்த 20 ஆம் தேதி மோடி சென்ற அமெரிக்க விமானம் தொழில்நுட்பக் காரணங்களால் நிறுத்தப்பட்டது என செய்தி வெளியிட்ட தமிழ் ஊடகங்கள் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

7 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்தப் பயணத்திற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி விமானத்தில் சென்ற போது டெக்னிக்கல் ஹால்ட்டாக (எரிபொருள் நிரப்புதல், விமான சோதனை) ஆகியவற்றுக்காக ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் நகரில் நிறுத்தப்பட்டது. இது சம்மந்தமாக செய்தி வெளியிட்ட ஏ என் ஐ நிறுவனம் டெக்னிக்கல் ஹால்ட் என செய்தி வெளியிட அதை சில தமிழ் ஊடகங்கள் டெக்னிக்கல் பால்ட் எனப் புரிந்துகொண்டு தவறாக செய்தி வெளியிட்டன.

இந்த செய்தி சில தமிழ் ஊடகங்களில் மட்டுமே வெளியானது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.