புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (11:56 IST)

கோவை மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தனரா?? விசாரணையில் தெரிந்த உண்மை என்ன??

உதித் சூர்யாவை போல் கோவையில் 2 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வெளிவந்த தகவலை நடந்த விசாரணையில் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான சென்னை மாணவன் உதித் சூர்யாவை போல் கோவையில் இரண்டு பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து நடந்த விசாரணையில், அந்த இரண்டு பேரில் (1 மாணவர், 1 மாணவி) மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாணவியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகின்றனர்.