திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (07:48 IST)

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இம்ரான்கான் கடிதம்: முக்கிய கோரிக்கை

பேஸ்புக் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எழுதிய கடிதத்தில் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் 

 
பேஸ்புக்கில் இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் அவர்களுக்கு இம்ரான்கான் எழுதிய கடிதத்தில் இஸ்லாம் மதம் குறித்த பயம் மற்றும் வெறுப்பு உணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது
 
எனவே இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதத்திற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் பேஸ்புக் நிறுவனத் தலைவர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்