வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:25 IST)

ஏணியின் இடுக்கில் தலையை விட்டு 5 நாட்கள் தவித்த முதியவர்!

பிரான்ஸில் ஒருவர் தனது கழிவறையை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவரது தலை ஏணியின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. 
 
எதுவும் செய்ய முடியாமல், அப்படியே ஐந்து நாட்களை கழித்துள்ளார் அந்த மனிதர். கிட்டத்தட்ட 60 வயதான அந்த ஆண் நபர், 5 நாட்களுக்கு பிறகு மருத்துவர்கள் வந்தபோது சுயநினைவுடனே இருந்தார் என்று பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஏணியில் உள்ள இரு படிகட்டுகளுக்கு இடையே அவரின் தலை மாட்டிக் கொள்ள வெளியே வர முடியாமல் தலை வீங்கிப்போனது. அவரால் போனையும் எடுக்க முடியவில்லை. 
 
தலைக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைந்து, உடலில் நீர்சத்து குறைபாடும் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.