தேர்தலில் யாருக்கும் உறுதியான வெற்றி இருக்க வாய்ப்பில்லை..

Last Modified புதன், 10 ஏப்ரல் 2019 (09:03 IST)
இஸ்ரேல் பொதுத்தேர்தலில் யாரும் உறுதியான வெற்றியைப் பெற வாய்ப்பில்லை என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் மையவாத புளூ மற்றும் வெள்ளை கூட்டணி 36 அல்லது 37 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் லிகுட் கட்சி 33லிருந்து 36 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
இருவருமே தாங்கள் வெற்றி பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.
israel
தேர்தலுக்கு பிந்தைய இரண்டு கருத்துக் கணிப்புகள் நேதன்யாஹுவுடன் கூட்டணி வைத்துள்ள வலது சாரிக் கட்சிகள் கூட்டணி அரசமைக்கலாம் என கணித்தன. ஆனால் மூன்றாவது கருத்துக் கணிப்பு ஒன்றில் கண்ட்ஸுடன் கூட்டணி வைத்துள்ள மத்திய மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அரசமைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :