உலகக்கோப்பை இந்திய அணி – ஏப்ரல் 15-ல் தேர்வு !

Last Updated: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (16:32 IST)
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட இருக்கிறது.

உலகக்கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து போன்ற சில நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அற்சிவித்து விட்டன.

உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 23 ஆகும். இந்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணிக்கான தேர்வு வரும் 15 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது. மும்பையில் 15-ம் தேதி நடைபெறும் தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நேரில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 பேர் கொண்ட அணியில் கிட்டதட்ட 12 பேரின் இடம் உறுதியாகியுள்ளது. 4 ஆவது இடத்துக்கான வீரர்  மற்றும் இரண்டாவது ஆல் ரவுண்டருக்கான இடங்கள் மற்றும் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. அந்த இடங்களை நிரப்புவதற்காகவே தேர்வுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :