புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (22:45 IST)

நெட்ஃபிலிக்ஸ்: ஊரடங்கால் முன்றே மாதங்களில் அதிகரித்த புதிய சந்தாதாரர்கள் -

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 7.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதம் வெளியிடவிருந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் சில நிகழ்ச்சிகள் தாமதமாவதால் வருங்காலத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அது குறைக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்திருந்தாலும் ஊரடங்கு காலத்திற்கு பிறகு அதன் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியுமா என்பதும் பெரிய கேள்விக்குறியே என்கிறார் பிபிசியின் தொழில்நுட்ப பிரிவு செய்தியாளர் ஜோ தாமஸ்.
மேலும், டிஸ்னி ப்ளஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்டிரிமிங் சேவைகளும் புதிய சந்தாதாரர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால் அதிகப்படியான போட்டியும் நிலவுகிறது என்கிறார் ஜோ தாமஸ்.
உலகமுழுவதும் தற்போது நெட்ஃபிலிக்ஸிற்கு 182 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் அதிகப்படியாக 7 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.