ஊரடங்கால் லாபம் ஈட்டிய நெட்பிளிக்ஸ் – மூன்று மாதத்தில் இத்தனை கோடியா?
கொரோனாவால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கல்லா கட்டியுள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன.
நெட்பிளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுக்க 18.20 கோடி சந்தாதாரர்கள் உள்ளார்கள். கொரோனா அச்சத்துக்குப் பிறகு இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிதாக 1.58 கோடி பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதன்மூலம் 22% வளர்ச்சியை அந்த நிறுவனம் அடைந்துள்ளது. மேலும் அதன் முதல் காலாண்டு வருமானமாக ரூ. 44,223 கோடி கிடைத்துள்ளது.