வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (16:20 IST)

ஜஸ்ட் டைம் பாஸ்... லாக்டவுன் முடியட்டும், பல்ப் வாங்க காத்திருக்கும் Netflix!!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 20 கோடி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை நெருங்குகிறது. 
 
கொரோனாவால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன.
 
நெட்பிளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுக்க பல கோடி சந்தாதாரர்கள் உள்ளார்கள். கொரோனா அச்சத்துக்குப் பிறகு இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிதாக ஒன்றே முக்கால் கோடி வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர். 
 
கடந்த 3 மாதங்களில் 5,388 கோடி ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளது இந்நிறுவனம். இது கடந்த இரு ஆண்டுகளை விட அதிகம் என்பது உறிப்பிடத்தக்கது. இந்த லாக்டவுன் நேரத்தில் ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் பார்க்கப்படுவதாகவும் நெட்பிளிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், லாக்டவுனுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை 75 லட்சம் வரை அதிரடியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளது.