தொடர்புடைய செய்திகள்
- திருச்சி-திருப்பதி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
- உக்ரைனிலிருந்து வேகமாக வெளியேறும் இந்தியர்கள் – கட்டுப்பாடுகளை தளர்த்திய மத்திய அரசு!
- என்ஜின் கவர் இல்லாமல் பறந்த விமானம்! – அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
- தூங்கி கொண்டிருந்த பெண் வன்கொடுமை! – நடுவானில் நடந்த பயங்கரம்!
- தடுப்பூசி போட்டிருந்தால் டிக்கெட்டில் சலுகை! – இண்டிகோ அசத்தல் அறிவிப்பு!
யுக்ரேன் உடனான விமான சேவைகளை நிறுத்தி வரும் அண்டை நாடுகள்
யுக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோஃப், யுக்ரேனின் விமான போக்குவரத்து இப்போது வரை செயல்பட்டு வருகிறது என்றும் 10 விமான நிறுவனங்கள் அவற்றின் விமான சேவைக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போதைய போர் பதற்ற சூழல் காரணமாக சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
"இருந்த போதும் மாற்று ஏற்பாடாய் யுக்ரேனிய சர்வதேச விமான நிறுவனம் யுக்ரேனிய தலைநகரிலிருந்து முனிக் மற்றும் ஜெனீவாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்குகின்றன," என அவர் கூறினார்.
ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி யுக்ரேனுக்கான விமான சேவைகளை நிறுத்தி உள்ளன. இதேபோல, ஜெர்மனியின் லுஃப்தான்சா இன்று முதல் யுக்ரேன் செல்லும் விமானங்களின் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது. முன்னதாக டச்சு விமான நிறுவனமான கே.எல்.எம் அதன் விமான சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்