வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (09:26 IST)

நரேந்திர மோடி, அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
 
"உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார்.ஆனால், உண்மையில் நமது பொருளாதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் உள்ளது.இருந்தாலும், பிரதமர் மோடி ஏன் 5-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார் என்பது புரியவில்லை.
 
பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாததுதான் அதற்குக் காரணம். அவருக்கு மட்டுமல்ல, நமது நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியவில்லை. அந்நியச் செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
 
ஆனால், அந்த மதிப்பு தொடர்ந்து மாறக் கூடியது ஆகும். அதனை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவது மிகவும் தவறாகவும்.
 
தற்போதைய நிலையில் அந்த விகிதத்தைக் கொண்டு கணக்கிட்டால், நாட்டின் பொருளாதாரம் 5-ஆவது இடத்தில் அல்ல; 7-ஆவது இடத்தில் இருக்கிறது.
 
உண்மையில், பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால், இந்தியப் பொருளாதரம் தற்போது உலக அளவில் 3-ஆவது இடத்தை வகிக்கிறது" என்று சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.