மோடி படத்தில் மோசடி – பாடலாசிரியர் அதிர்ச்சி !

Last Modified சனி, 23 மார்ச் 2019 (09:00 IST)
விரைவில் வெளியாக இருக்கும் பிரதமர் மோடியின் வரலாற்று திரைப்படமான நரேந்தர மோடி படத்தின் மீது பிரபல பாடலாசிரியர் ஜாவெத் அக்தர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

விவேக் ஓப்ராய் நடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பிஎம் நரேந்திரமோடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகியிருக்கும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பிரதமர் வேட்பாளரின் திரைப்படம் வெளிவருவது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் மீது மற்றொருக்  குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. அது பிரபல ஹிந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தான் இந்தப் படத்தில் எந்த பாடல்களையும் எழுதாத போதும் படக்குழு தனது பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்தி வருவதாக அவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.


இது சம்மந்தமாக அவர் தனது டிவிட்டரில் மோடி படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு ‘இந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த படத்தில் எந்த பாடலும் எழுதவில்லை’ எனக் கூறியுள்ளார். ஜாவேத் அக்தர் இந்தி திரையுலகில் பிரபல பாடலாசிரியர் என்பதால் அவரது பெயரைப் போஸ்டரில் பயன்படுத்தினால் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பதால் தான் படக்குழு இப்படி கீழ்த்தரமாக செயல்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :