திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 மார்ச் 2025 (18:34 IST)

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

Sunita Williams
விண்வெளி ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ஸ் வில்மோர் ஆகிய இருவரும் சென்றிருந்தனர்.  ஒன்பது மாதங்களுக்கு மேலாக அவர்கள் அங்கே சிக்கிக் கொண்டு, பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
 
இந்த சூழலில், தற்போது இருவரையும் பூமிக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், மார்ச் 16ஆம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் நாசா அறிவித்துள்ளது.
 
எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் தான் அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, சிறப்பு விண்கலம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த விண்கலத்தில்  நான்கு பேர் அமரும் வசதி கருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
நாசா விண்வெளி வீரர் இருவர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள். சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  வில்மோருக்காக இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், நால்வரும் ஒன்றாக மார்ச் 16ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran