பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 111 பேர் போட்டி! யார் தெரியுமா?

Last Modified வெள்ளி, 22 மார்ச் 2019 (20:02 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த 111 பேர் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர். அவர்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாகண்ணுவும் அவரது ஆதரவு விவசாயிகளும் தான் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில மாதங்களுக்கு முன் அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் டெல்லியில் பல நாட்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தியும் பிரதமரும் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு பாடம் புகட்டவே அவரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Ayyakannu
வாரணாசி தொகுதியில் வரும் 25ஆம் தேதி 111 பேர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்,. ஒரே தொகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அந்த தொகுதியில் இயந்திர வாக்குப்பதிவு சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :