தொடர்புடைய செய்திகள்
- ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகள் போராட்டம்: வைரமுத்து ட்விட்!
- வீட்டுகாவலில் வைக்கப்பட்டாரா டெல்லி முதல்வர்? அதிர்ச்சி தகவல்!
- விவசாயிகளுக்கு ஆதரவு… விருதை திருப்பி அளித்த விளையாட்டு வீரர்!
- பாரத் பந்த்: தமிழகம், புதுச்சேரியிலும் கடைகள் அடைப்பு!
- உலகம் எங்கும் எதிரொலிக்கும் டெல்லி போராட்டம்! – லண்டனில் ஆதரவு போராட்டம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா?
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்த பிறகு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ஆம் ஆத்மி கட்சி தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
இதனை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. "பாஜகவின் டெல்லி போலீஸ் அரவிந்த் கேஜ்ரிவாலை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. அவர் நேற்று சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து (அரவிந்த் கேஜ்ரிவால்) வீட்டில் இருந்து வெளியேறவோ, வீட்டுக்குள் நுழையவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை" என்று அந்த ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ட்வீட்டுக்கு டெல்லி வடக்கு துணை போலீஸ் ஆணையரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பதில் அளித்துள்ளது. அதில் "டெல்லி முதல்வர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் இந்தக் கூற்று தவறானது. மண்ணின் சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார். வீட்டின் முகப்பைக் காட்டும் படம் எல்லாவற்றையும் கூறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் முகப்பைக் காட்டும் படம் ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்கள். 'சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார்' என்றால் அதன் பொருள் என்ன? இதில் போலீஸ் ஏதேனும் நுட்பமாக சொல்ல வருகிறதா? என்று தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்