1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (14:53 IST)

கோவிட்-19: புதிய பெயர் பெற்றுள்ள கொரோனா!!

கொரோனோ வைரஸால் தற்போது உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19 என அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே குழப்பங்களை தவிர்க்க கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நோய்க்கு அதிகாரப்பூர்வ பெயர் வைத்திட வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், ஜெனீவாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், தற்போது இந்த நோய்க்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
 
கொரோனா வைரஸால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்த பெயர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த நோயால் பல ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
''கொரோனா'', ''வைரஸ்'' மற்றும் ''நோய்'' ஆகிய வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புதிய பெயருடன் இணைந்துள்ள 19 என்ற எண், இந்த வைரஸ் பரவ தொடங்கிய 2019 என்ற ஆண்டை குறிப்பதாகும்.