24/7 இயங்கும் சுடுகாடுகள், தொடர்ந்து எரிக்கப்படும் உடல்கள்: சீனாவில் நடப்பது என்ன??
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களை எரிக்கும் பணி எப்போதுமே நடைபெற்று வருகிறதாம்.
சீனாவின் வூகான் நகரிலிரிந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீன தேசமே வரலாறு காணாத உயிரிழப்பை சந்தித்து வருகிறது. உலக நாடுகள் தங்கள் பிரஜைகளை சீனாவிலிருந்து வெளியேற்றியதுடன், ஹாங்காங் போன்ற தன்னாட்சி நாடுகள் சீனா எல்லையையும் மூடிக்கொண்டுள்ளன.
மிக வேகமாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் 1011 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தாலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. மேலும் 20,000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சீனாவில் உள்ள மருத்துவ குழுக்களும் மருத்துவ வசதிகளை செய்ய முடியாமல் திணறி வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் இருந்து தப்பியோடி அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் குயோ வெங்குயி, உகானில் உள்ள 49 சுடுகாடுகளும் 24 மணி நேரமும் இயங்குகின்றதாம். அங்கு ஒரு நாளைக்கு 1,200-க்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 17 நாட்களுக்கும் மேலாக உகான் நகர சுடுகாடுகளில் உள்ள ஊழியர்கள் தொடர்ந்து பணியில் உள்ளனர். உகான் தவிர சீனாவின் மற்ற நகரங்களில் உள்ள சுடுகாடுகளிலும் இந்த செயல் தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.