புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (09:34 IST)

ஒரு கோடி தருகிறேன்:எப்படியாவது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் – சூப்பர் ஸ்டார் வேண்டுகோள்!

கோப்புப் படம்

கொரோனா வைரஸ் தாக்குதல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள் நிலையில் அதற்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்தான் இன்று உலகை பயத்தில் ஆழ்த்தியிருக்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இதுவரை 900 க்கு மேற்பட்டோர் பலி ஆகியுள்ளனர். 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ள சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தனி மனிதராகவோ அல்லது குழுவாகவோ மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் யென் (1.02 கோடி ரூபாய்) பரிசுத்தொகை அளிக்க இருப்பதாக சொல்லியுள்ளார்.