வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (14:37 IST)

இந்திய - சீன எல்லை மோதலில் பயன்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் இவை தான்..!

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய - சீனப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இருப்பவை ஆணிகள் பொருத்தப்பட்ட வலுவான இரும்புக் கம்பிகள்.
 
ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது.

ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.
 
இந்நிலையில் இந்த தாக்குதலில் சீனர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் என்று கூறி, இந்திய சீன எல்லையில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு படத்தை பிபிசிக்கு அனுப்பியிருந்தார். அந்தப் படம்தான் இங்கே பகிரப்படுகிறது.