வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (12:47 IST)

ஜின்பிங்-க்கும் கிம் ஜாங்-ங்கும் வித்தியாசம் தெரியலயா?

சீன அதிபரின் உருவபொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவத்தை எரித்து பாஜகவினர் போராட்டம். 
 
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வாய் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆவேசமாக மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும் சீனா தரப்பிலும் 35 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் சீனாவின் அத்துமீறி தாக்குதலால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால் இந்தியர்கள் அனைவரும் பெரும் ஆவேசத்தில் உள்ளனர். சமூகவலைதளத்தில் சீனாவின் செயலிகளை பயன்படுத்த கூடாது என்றும் சீன பொருட்களை இனிமேல் இறக்குமதி செய்யக்கூடாது என்றும் கோஷங்கள் முழங்கபட்டு வருகிறது.
 
இந்நிலையில் சீனாவின் மீதுள்ள கோபத்தில், சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் மேற்கு வங்கத்தின் அசான்சோலைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள்.