1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 ஜூன் 2025 (16:44 IST)

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Subramaniyan
தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஜூலை 24 அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில், சிட்கோவால் எஸ்.கே.கண்ணனுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த மா. சுப்பிரமணியன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு  லஞ்ச ஒழிப்புப் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விரைந்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran