1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (12:37 IST)

உடனடியாக ரஷ்ய விமானங்கள் தேவை! – தயாராகிறதா இந்தியா?

இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு எழுந்துள்ள நிலையில் ரஷ்யவிடமிருந்து புதிய விமானங்கள் வாங்க மத்திய அரசுக்கு இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம்  தீர்க்க இருநாட்டு அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் ரஷ்யாவிடமிருந்து 33 புதிய விமானங்களை வாங்க மத்திய அரசிடம் விமானப்படை கோரிக்கை வைத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து மிக் உள்ளிட்ட சில ரக போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து மிக்-29 ரக போர் விமானங்கள் 21 மற்றும் எஸ்யூ-30 ரக போர் விமானங்கள் 12 வாங்க இந்திய விமானப்படை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதன்மூலம் விமானப்படை கூடுதல் பலம் பெறும் என கூறப்படும் நிலையில் எல்லையில் நிலவும் பதற்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.