1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (11:54 IST)

ஒட்டுமொத்த தேசமே ராணுவத்தின் பின்னால் நிற்கிறது, பாஜக பின்னாலல்ல: உதயநிதி

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த உயிரிழப்பிற்கு எதிர்க்கட்சிகள் சரமாரியாக பிரதமர் மற்றும் மத்திய அரசை பார்த்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்
 
குறிப்பாக இந்திய  வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல் அனுப்பியது யார்? அதற்கு அனுமதி கொடுத்தது யார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எழுப்பிய கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் சீன விவகாரம் குறித்து இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் முக ஸ்டாலின் அவர்களும், அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அவர்கள் தங்களுடைய கருத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் சீன விவகாரம் குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்திய-சீன ராணுவ வீரர்களுக்குள் 50 நாட்களாக கைகலப்பு, சச்சரவு. ‘நம் பிரதமர் இதுபற்றி மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை’ என்றால், ‘நீ தேச துரோகி’ என்கிறது பாஜக. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தேசமே ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றுகிறது, அவர்களின் பின்னால் நிற்கிறது. பாஜகவின் பின்னாலல்ல.

1960க்கு பிறகு இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே நேரடி மோதல் இல்லை. 1975ல் சீன தாக்குதலுக்கு 4 இந்திய வீரர்கள் இறந்தனர். எல்லையில் சில கைகலப்புகள் நடந்திருந்தாலும் 40 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் அது உயிரிழப்புவரை சென்றுள்ளது. விலைமதிப்பற்ற நம் ராணுவ வீரர்கள் 20 பேரை இழந்துள்ளோம்.

சீனாவுடனான மோதலில் நம் வீரர்களிடம் ஆயுதம் இருந்தது. ஒப்பந்தத்துக்கு பணிந்து அவற்றை பயன்படுத்தவில்லை’ என்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். இதுதான் ‘ராணுவ ஒழுங்கு’. இத்தியாகத்துக்கு ஈடே கிடையாது. இதையும் பாஜகவினர் தங்களின் தியாகம் போல் பேசுவது அவ்வீரர்களுக்கு செய்யும் துரோகம்.
 
உதயநிதி ஸ்டாலினின் இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.