யானைக்கால் ஸ்டூல்: வித்தியாசமான பரிசா இருக்கும் போல...

Last Updated: புதன், 8 மே 2019 (15:14 IST)
போட்ஸ்வானாவில் பாலூட்டி விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மூன்று ஆஃப்ரிக்க தலைவர்களுக்கு யானைக்காலால் செய்யப்பட்ட ஸ்டூல் பரிசாக அளிக்கப்பட்டது.
 
நீல நிற துணியால் சுற்றப்பட்ட அந்த பரிசுப்பொருள் போஸ்ட்வானாவின் அதிபர் மோக்வே சிமாசிசேவால், நமீபியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அதிபர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
 
இந்த நாடுகள் மற்றும் தென் ஆப்ரிக்கா, யானை தந்தங்களை விற்பதற்கான தடையை நீக்குமாறு கோருகின்றன. வர்த்தகத்தில் வரக்கூடிய பணத்தை விலங்குகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என இந்த நாடுகள் தெரிவிக்கின்றன.
ஆஃப்ரிக்கா முழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 யானைகள் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வெறும் 4 லட்சத்தும் 50 ஆயிரம் யானைகளே மிஞ்சியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த யானைக்கால்களால் ஆன ஸ்டூல்கள் பரிசாக வழங்குவதன் மூலம், போட்ஸ்வானா யானை தந்த வர்த்தகத்துக்கு தங்களின் ஆதரவு குறித்து வலுவான ஒரு செய்தியை சொல்கிறது என கூறப்படுகிறது. 

இதில் மேலும் படிக்கவும் :