1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Bitain army distributes Petrol

பெட்ரோல் விநியோகிக்கும் பிரிட்டன் ராணுவம்

பெட்ரோல் விநியோகிக்கும்
பிரிட்டனில் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் பங்குகளில் போதிய அளவுக்கு எரிபொருள் இல்லை. 
 
எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பிரச்சனையை சரி செய்ய, பிரிட்டன் அரசு ராணுவத்தை களமிறக்கியுள்ளது.
 
திங்கட்கிழமை முதல் பிரிட்டன் ராணுவத்தினர் கராஜ்களுக்கு எரிபொருளை விநியோகிப்பர் என அரசு தரப்பு கூறியுள்ளது. எரிபொருள் விநியோகப் பிரச்சனையை எதிர்கொள்ளும் பணியில் சுமார் 200 ராணுவத்தினர் (அதில் 100 பேர் ஓட்டுநர்கள்) ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டிலிருந்து 300 எரிபொருள் டேங்கர் லாரி ஓட்டுநர்களை வரவழைத்து, அவர்கள் வரும் மார்ச் மாதம் வரை பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
 
பிரிட்டனில் 1,100 பெட்ரோல் நிரப்பும் பங்குகளிடம், பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் 26 சதவீத பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் கையிருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு