திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (12:25 IST)

தீபாவளிக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?

நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், பள்ளி திறப்பை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா என கேள்வி. 
 
கொரோனா காரணமாக ஆன்லைன் வழி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. 
 
இதையடுத்து, எப்போது 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடங்கும் எனக் கேள்விகள் எழுந்தது. இதன் பின்னர் சமீபத்திய ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், பள்ளி திறப்பை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா என அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பள்ளி திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை. 
 
கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் நடத்த அனுமதிக்கப்படும். தற்போது உள்ள சூழலில் நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளி என்றாலும் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் மற்றமில்லை என தெரிவித்தார்.