ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 மே 2019 (16:24 IST)

காம்பீருக்கு திமிர் அதிகம் : பிரபல கிரிக்கெட் வீரர் கமெண்ட்

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். இவர் தற்போது பாஜக கட்சியில் சேர்ந்து மக்களவை தேர்தலில்  அக்கட்சியின் சார்பில் டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிதி தனது சுயசரிதை புத்தகமான கேம் சேஞ்சரில்’ காம்பீரை பற்றி கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார்.
அதில் ,மைதானத்தில் கவுதம் காம்பீருக்குத் திமிர் அதிகம், அவரது ஆடிட்டியூட்தான் மோசமாக உள்ளது. ஆனால் அவர் தான் வெளிப்படுத்தும் ஆடிட்டியூட் அளவுக்கு அவரிடம் சாதனை செய்ததற்கான் என்ன ஆவணம் இருக்கு என்று கேள்விஎழுபியுள்ளார்.
 
மேலும் அப்புத்தகத்தில் காம்பீர் தன்னை டான் பிராட்மேன், பாண்ட் ஆகியோர் மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு நடந்துகொள்வார்.ஆகமொத்தம் காம்பீர் பாசிட்டிவ் வீரராக இல்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பை போட்டில் களத்தில் இருவருக்கும் மோதல் எழுந்து. நடுவர் மட்டும் அப்போது எங்களைத்தடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் கைகலப்பில் ஈடுபட்டிருப்போம். என்று அதில் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் தற்போது காம்பீர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அஃப்ரிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது : நகைச்சுவையான மனிதன் நீங்கள். எதுஎப்படியோ நாங்கள் பாகிஸ்தானியர்க்கு மருத்துவத்துக்கான  சிறப்பு விசா எடுத்துக்கொடுக்கிறோம்.உங்களை தனிப்பட்டரீதியாக மனநல மருத்துவரிடம் அழைத்துக்செல்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.