1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (14:28 IST)

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு !

சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசுத் ஆசாரின் சொத்துகளை முடக்க பாகிஸ்தான் அரசு ஒத்துக்கொண்டுள்ளது.

புல்வாமா தாக்குதல், பதன்கோட் தாக்குதல், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல், ஜம்மூ காஷ்மீர் சட்டமன்றத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணமான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில் சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்த நிலையில் தொடர் அழுத்தங்களால் சீனா இறங்கி வந்துள்ளது. இதையடுத்து ஐ.நா மே 1 ஆம் தேதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக  அறிவித்தது.

இந்நிலையில் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களின் சொத்து மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை முடக்குவது நடைமுறை. அதன் படி இப்போது பாகிஸ்தானில் உள்ள மசூத் ஆசாரின் சொத்துகள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை முடக்கப்பட்டு அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தண்டனைகள் உடனடியாக அமல்படுத்தும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார். அதுபோல மசுத் ஆசாருக்கு சொந்தமாக பிரான்ஸில் உள்ள சொத்துகளை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.