உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டங்கள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் எகிப்து-உருகுவே, மொராக்கோ- ஈரான், போர்ச்சுகல்-ஸ்பெயின் என 3 மேட்சுகள் நடைபெற உள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. நேற்றைய ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை கால்பந்து முதல் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதிஅரபியாவை ரஷ்யா வீழ்த்தியது.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு, ‘ஏ’ பிரிவில் இருக்கும் எகிப்து-உருகுவே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் எகடெரின்பர்க்கில் நடக்கிறது.
இதனையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு, ‘பி’ பிரிவில் இருக்கும் மொராக்கோவும், ஈரானும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மோதவுள்ளன.
அதையடுத்து இன்று இரவு 11.30 மணிக்கு, ‘பி’ பிரிவில் இருக்கும் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணி சோச்சி நகரில் மோதவுள்ளன.
இந்த விளையாட்டை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.